ADDED : செப் 04, 2024 01:05 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஈரோட்டில் வ.உ.சி., பூங்கா விளையாட்டு மைதானத்தில், தடகள விளையாட்டு சங்கம் சார்பில் நடத்தப்படும் விளையாட்டு போட்டிகளை, வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துசாமி, நேற்று துவக்கி வைத்தார்.
நிருபர்களிடம் அமைச்சர் கூறியதாவது:
டாஸ்மாக் கடைகளில், மது பானங்களை கூடுதல் விலைக்கு விற்கப்படுவதை தடுக்க, 12,000 பில்லிங் மெஷின்கள் வாங்கப்பட்டுள்ளன. அனைத்து கடைகளிலும் இந்த மெஷின் வைக்கப்பட்டு விட்டால், கூடுதல் விலைக்கு விற்கப்படுவது முற்றிலும் தடுக்கப்படும்.
ஊழியர்களின் சம்பள உயர்வு தொடர்பாக டாஸ்மாக் தொழிற்சங்கங்களுடன் பேச்சு நடத்தப்படுகிறது. 'டிஜிட்டல் பேமன்ட்' திட்டமும் விரைவில் அமல்படுத்தப்பட உள்ளது.
இவ்வாறு அமைச்சர் கூறினார்.