ADDED : ஆக 19, 2024 07:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை : இந்திய கடலோர காவல்படையின் தலைமை இயக்குனர் ராகேஷ் பால், 59, நேற்று காலமானார்.
சென்னையில் புதிதாக கட்டப்பட்டுள்ள கடலோர காவல் படையின் கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மைய கட்டட திறப்பு விழா, நேற்று நடந்தது. இந்த விழாவில் பங்கேற்க இருந்த நிலையில், ராகேஷ் பாலுக்கு நேற்று மதியம் 2:00 மணிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது.
ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆஞ்சியோ பரிசோதனை செய்யப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும். சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்தார். ராணுவ அமைச்சர் ராஜ்நாத்சிங், முதல்வர் ஸ்டாலின் ஆகியோர், மருத்துவமனைக்கு சென்று அஞ்சலி செலுத்தினர்.
மறைந்த ராகேஷ் பால், 25வது இந்திய கடலோர காவல் படை தலைமை இயக்குனர்; 2023 ஜூலை 19 முதல், இந்த பதவியில் இருந்து வந்தார்.

