ADDED : ஆக 30, 2024 02:02 AM
சென்னை:தமிழ்நாடு அரசு கேபிள் 'டிவி' நிறுவனம் சார்பில், 530 அரசு இ - சேவை மையங்கள், 328 நிரந்தர ஆதார் சேர்க்கை மையங்கள், தமிழகம் முழுதும் செயல்படுகின்றன. இவற்றின் வழியே, 170க்கும் மேற்பட்ட சேவைகள் வழங்கப்படுகின்றன.
சென்னையில் தலைமை செயலகம், உள்ளிட்ட அலுவலகங்களில், தகவல் தொழில்நுட்ப துறையின் கீழ், இ - சேவை மையங்கள் செயல்படுகின்றன. இவற்றில் வெளிமுகமை நிறுவனம் வழியே, தற்காலிக அடிப்படையில், தரவு உள்ளீட்டாளர்கள் பணிபுரிகின்றனர். இவர்களின் சேவைகளில் குறைபாடு இருப்பது, அரசின் கவனத்திற்கு வந்தது.
அதைத் தொடர்ந்து, ஒரே இடத்தில் நீண்ட காலமாக பணிபுரிந்து வந்த, 44 தற்காலிக தரவு உள்ளீட்டாளர்கள், அரசு கேபிள் 'டிவி' நிறுவனத்தின் கீழ் செயல்படும், அரசு இ - சேவை மையங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் இடத்திற்கு வேறு நபர்கள் மாற்றப்பட்டு உள்ளனர்.

