ADDED : ஆக 13, 2024 10:58 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போதை பொருட்கள் கடத்தல் கும்பல் தலைவனும், தி.மு.க., பிரமுகருமான ஜாபர் சாதிக், போதை பொருட்கள் கடத்தியதற்காக, மத்திய போதை பொருட்கள் கடத்தல் தடுப்பு பிரிவு கைது செய்தது. சர்வதேச அளவில் போதை பொருட்கள் கடத்தலில் ஈடுபட்டு, அதன் வாயிலாக வருவாய் ஈட்டியதற்காக, அவரது சகோதரரும், வி.சி., நிர்வாகியுமான முகமது சலீம், தற்போது, அமலாக்க துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சமீபத்தில், 70 கோடி ரூபாய் மதிப்பிலான, 'மெத்தாம்பெட்டமைன்' போதை பொருளை கடத்தியதற்காக தி.மு.க., பிரமுகர் இப்ராகிம், போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவால் கைது செய்யப்பட்டார். இவை, அரசுக்கு அவமானம் என்பதை ஸ்டாலின் உணர வேண்டும்.
- அண்ணாமலை,
தமிழக பா.ஜ., தலைவர்.