ADDED : ஏப் 23, 2024 04:49 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: பாலியல் துன்புறுத்தல் வழக்கில் 3 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைக்க கோரிய முன்னாள் சிறப்பு டி.ஜி.பி., ராஜேஷ் தாஸ் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதையடுத்து நீதிபதிகள், ''அதிக ஒழுக்கத்துடன் இருக்க வேண்டிய போலீசார், நாட்டின் பிற குடிமக்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும். ஆனால் முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் ஒழுக்கக்குறைவுடன் உடன் பணியாற்றும் அதிகாரியிடம் முறை தவறி நடந்திருக்கிறார்.
உயர் பதவி வகித்த ராஜேஷ் தாஸ், தனக்கு கீழ் பணியாற்றும் பெண் அதிகாரியிடம் முறை தவறி நடந்திருக்கிறார் என்பது வேதனை அளிக்கிறது. உடனடியாக அவர் போலீசார் முன்பு சரணடைய வேண்டும்'' என உத்தரவிட்டனர்.

