தி.மு.க.,- - காங்., கூட்டணி வெற்றி பெறும் கார்த்தி எம்.பி., பேட்டி
தி.மு.க.,- - காங்., கூட்டணி வெற்றி பெறும் கார்த்தி எம்.பி., பேட்டி
ADDED : ஏப் 02, 2024 02:10 AM
சிவகங்கை: ''தமிழகத்தில் லோக்சபா தேர்தலில் அனைத்து தொகுதியிலும் தி.மு.க., -- காங்., கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள் '' என சிவகங்கையில் கார்த்தி எம்.பி., தெரிவித்தார்.அவர் கூறியதாவது:
பா.ஜ.,வினர் பாபர், அவுரங்கசீப், கிழக்கிந்திய கம்பெனிகள் என படிப்படியாக சரித்திரத்தோடு சண்டை போடுவார்கள். அவர்கள் கற்பனை சரித்திர சண்டையில் மூழ்கி, நிகழ்காலத்திற்கு வருவதில்லை. கச்சத்தீவு குறித்து 50 ஆண்டுக்கு முன் இரு நாடுகளுக்கு இடையே நடந்த ஒப்பந்தத்தை இப்போது பா.ஜ., கிளப்பி வருகிறது. கச்சத்தீவு ஒப்பந்தப்படி தான் இந்தியாவிற்கு 6 லட்சம் பேர் குடிபெயர்ந்துள்ளனர்.
இதற்கு மாறாக சீனா ஊடுருவி இந்தியாவில் ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர் இடங்களை கைப்பற்றியுள்ளது. சீன ராணுவம் இந்தியாவிற்குள் வந்து விட்டது. இது குறித்து பிரதமர், ராணுவ, உள்துறை, வெளியுறவு துறை அமைச்சர்கள் பார்லிமென்டில் பதில் சொல்லவே இல்லை.
லோக்சபா தமிழகத்தில் பா.ஜ., 3 வது இடத்திற்கு தள்ளப்படும். பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை கச்சத்தீவு விஷயத்தை சீரியல் போன்று பாகம் பாகமாக வெளியிட்டு வருகிறார். தி.மு.க., - காங்., கூட்டணி 20 ஆண்டு காலமாக நீடித்து வருகிறது. இக்கூட்டணி வேட்பாளர்கள் அனைத்து தொகுதியிலும் வெற்றி பெறுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

