தி.மு.க., வேட்பாளர் செல்வகணபதி வேட்பு மனு தள்ளுபடி செய்யப்படும்?
தி.மு.க., வேட்பாளர் செல்வகணபதி வேட்பு மனு தள்ளுபடி செய்யப்படும்?
ADDED : மார் 28, 2024 01:56 AM
சேலம்:தமிழகத்தில் லோக்சபா தேர்தல், வரும் 19ல் நடக்க உள்ள நிலையில், வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் நேற்று நிறைவடைந்தது. சேலம் தி.மு.க., வேட்பாளராக செல்வகணபதி மனுதாக்கல் செய்துள்ளார்.
சேலம் வடக்கு சட்டசபை தொகுதி, பாகம் எண்: 99ல் வரிசை எண், 551ல், ஏ.டபுள்யு.பி.1264126 என்ற எண்ணில் வாக்காளராக இடம்பெற்றுள்ளார்.
அதேபோல் சேலம் மேற்கு சட்டசபை தொகுதி, பாகம் எண்: 173ல் வரிசை எண், 181ல், ஏ.எஸ்.பி.,1799279 என்ற எண்ணில் வாக்காளராக இடம்பெற்றுள்ளார் என, வாக்காளர் பட்டியல் நகலுடன் வைரலாக்கப்பட்டது.
இவரது பெயர், இரு தொகுதிகளில் உள்ளதால், மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்பிரிவு, 17, 18ன் கீழ் குற்றம் என்பதால் அவரது வேட்பு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என, ேவட்பு மனு பரிசீலனையின் போது வலியுறுத்தி, பா.ஜ., கூட்டணி - அ.தி.மு.க.,வினர் எதிர்ப்பு தெரிவிக்க முடிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து, செல்வகணபதி கூறுகையில், ''நான் ஏற்கனவே நீக்கல் படிவம் கொடுத்துள்ளேன். அதை மீறி, நீக்காமல் வைத்திருப்பது என் தவறு அல்ல. இந்த விஷயத்தை சட்டப்படி சந்திக்க தயாராக உள்ளேன்,'' என்றார்.

