'குடிமராமத்து திட்டத்தை கைவிட்ட தி.மு.க., அரசு': இபிஎஸ்
'குடிமராமத்து திட்டத்தை கைவிட்ட தி.மு.க., அரசு': இபிஎஸ்
ADDED : ஏப் 28, 2024 05:39 AM
இடைப்பாடி: சேலம் மாவட்டம் இடைப்பாடியில், அ.தி.மு.க., பொது செயலர் பழனிசாமி கூறியதாவது:
அ.தி.மு.க., ஆட்சியில், மேட்டூர் அணை துார்வாரப்பட்டது. ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின் தி.மு.க., அரசு கிடப்பில் போட்டுவிட்டது. அதுபோல, குடிமராமத்து திட்டத்தையும் தொடரவில்லை. இத்திட்டத்தை தொடர்ந்திருந்தால், 8,000 ஏரிகளில் மழைநீர் சேர்ந்திருக்கும்.
தமிழகத்தில் நாளுக்கு நாள் 'போதை' தகராறு அதிகரித்து வருகிறது. இதை அரசும், போலீஸ் உயரதிகாரிகளும் கண்டு கொள்ளவில்லை. தி.மு.க.,வில் உள்ள கூட்டணி கட்சிகள் எல்லாம், தி.மு.க.,வாகவே மாறிவிட்டன. நாட்டில் நடக்கும் பிரச்னைகளை எதிர்க்கட்சிகள், அரசின் கவனத்துக்கு எடுத்து வைக்கவேண்டும். நல்ல எதிர்க்கட்சி, மக்கள் பிரச்னைகளை எடுத்து வைத்தால்தான், அரசு கவனமாக செயல்பட்டு தடுத்து நிறுத்தும்.
ஆனால், தி.மு.க., தலைமையிலான கூட்டணி கட்சிகள், அக்கட்சியில் இணைந்து விட்டதால் அதை எதிர்த்து பேச மறுக்கின்றனர்.
இவ்வாறு பழனிசாமி கூறினார்.

