நிதி நெருக்கடியிலும் திட்டங்களை செயல்படுத்தும் திமுக: தேர்தல் பிரசாரத்தில் உதயநிதி பேச்சு
நிதி நெருக்கடியிலும் திட்டங்களை செயல்படுத்தும் திமுக: தேர்தல் பிரசாரத்தில் உதயநிதி பேச்சு
ADDED : மார் 27, 2024 05:57 PM

ராணிப்பேட்டை: கடும் நிதி நெருக்கடியிலும் திட்டங்களை திமுக அரசு செயல்படுத்தியுள்ளது என தேர்தல் பிரசாரத்தில் அமைச்சர் உதயநிதி பேசுகையில் குறிப்பிட்டார்.
ராணிப்பேட்டையில் அரக்கோணம் லோக்சபா தொகுதி திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகனை ஆதரித்து அமைச்சர் உதயநிதி தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது உதயநிதி பேசியதாவது: முதல்வர் ஸ்டாலின் சொல்வதை தான் செய்வார். செய்வதை தான் சொல்வார். கொரோனா காலத்தில் கொரோனா வார்டுக்குள் சென்று முதல்வர் ஸ்டாலின் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
கடும் நிதி நெருக்கடியிலும் திட்டங்களை திமுக அரசு செயல்படுத்தியுள்ளது. பா.ஜ., ஆளாத மாநிலங்களுக்கு நிதி எனும் ஆக்சிஜனை நிறுத்தி, வளர்ச்சியை தடுக்கும் ஜனநாயக விரோதிகளை வீட்டுக்கு அனுப்பிட நம் சமூகநீதி மண்ணிலிருந்து உறுதி ஏற்போம்.
காஸ் சிலிண்டர் விலையை ரூ.100 குறைத்து பிரதமர் மோடி நாடகமாடுகிறார். பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் காஸ் சிலிண்டர் விலையை உயர்த்தி விடுவார். புயல் வெள்ள பாதிப்பின் போது வராத பிரதமர் மோடி தேர்தலுக்காக தமிழகத்துக்கு வருகிறார். இவ்வாறு அவர் பேசினார்.

