அரசியல் சாசனத்தை மாற்ற நினைத்தவர்களை அதனை முத்தமிட வைத்தது திமுக : ஆ.ராசா
அரசியல் சாசனத்தை மாற்ற நினைத்தவர்களை அதனை முத்தமிட வைத்தது திமுக : ஆ.ராசா
ADDED : ஜூன் 13, 2024 09:03 PM

மேட்டுப்பாளையம் : நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் நீலகிரி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட ஆ.ராசா தன்னை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜ.க வேட்பாளரும் மத்திய இனை அமைச்சருமான எல்.முருகனை விட இரண்டு லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
வெற்றி பெற்ற பின் நீலகிரி தொகுதிக்குட்பட்ட மேட்டுப்பாளையம் பகுதிக்கு வந்த ஆ.ராசாவுக்கு திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் வரவேற்பு அளித்தனர்..
அதனை தொடர்ந்து ஆ.ராசா பேருந்து நிலையம் அருகே உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் அங்கு கூடியிருந்த திமுக வினர் மற்றும் பொதுமக்கள் மத்தியில்தனக்கு வாக்காளித்தவர்களுக்கு நன்றி தெரிவித்து பேசியதாவது: 'இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்க இயலாமல் போயிருக்கலாம். அதே நேரத்தில் அரசியல் சாசனத்தை மாற்ற நினைத்தவர்களை, அதனை முத்தமிட வைத்தது தமிழகத்தில் திமுக பெற்ற மகத்தான வெற்றி.
நாடாளுமன்றத்தில் பாஜக முன்பு போல் இயங்க இயலாது மக்கள் சட்டங்களை கொண்டு வர முயன்றால் எதிர்கட்சிகளான எங்கள் கூட்டணி கடுமையாக எதிர்க்கும்.எனக்கு பெருமளவு வாக்களித்து வெற்றி பெற வைத்த மேட்டுப்பாளையம் பகுதி மக்களுக்கு நன்றியுடன் செயல்படுவேன்.மேட்டுப்பாளையம் பகுதியில் நிலவும் போக்குவரத்து நெரிசலை குறைக்க அவசியம் ரிங் ரோடு அமைத்து தரப்பட நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.