ADDED : மே 28, 2024 08:56 PM
சென்னை:தி.மு.க., மாவட்டச் செயலர்கள், வேட்பாளர்கள், தலைமை முகவர்கள் மற்றும் ஓட்டு எண்ணிக்கை முகவர்கள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம், வீடியோகான்பரன்ஸ் வாயிலாக, ஜூன் 1ல் நடக்க உள்ளது.
தி.மு.க., பொதுச்செயலர் துரைமுருகன் அறிக்கை:
லோக்சபா தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கை, ஜூன் 4ல் நடக்கவுள்ளது. இதுகுறித்து, கலந்தாலோசனை கூட்டம், முதல்வர் ஸ்டாலின் அறிவுரைப்படி, ஜூன் 1ல், வீடியோகான்ரபன்ஸ் வாயிலாக நடக்கிறது.
அக்கூட்டத்திற்கு, அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி தலைமை வகிக்கிறார். மாவட்டச்செயலர்கள், வேட்பாளர்கள், தலைமை முவகர்கள் மற்றும் ஓட்டு எண்ணிக்கை முகவர்கள் பங்கேற்கின்றனர். தி.மு.க., சட்டத்துறை செயலர் என்.ஆர்.இளங்கோ எம்.பி., ஓட்டு எண்ணிக்கையின்போது, கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து ஆலோசனை வழங்க உள்ளார்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.