தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ 'மாணவரை தாக்கிய தி.மு.க.,வினரை கைது செய்யணும்'

'மாணவரை தாக்கிய தி.மு.க.,வினரை கைது செய்யணும்'

'மாணவரை தாக்கிய தி.மு.க.,வினரை கைது செய்யணும்'


ADDED : ஆக 15, 2024 05:25 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 15, 2024 05:25 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: 'பள்ளி மாணவர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய தி.மு.க.,வினர் மீது, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் காவல் நிலையம் அருகில், பிளஸ் 2 படிக்கும் மாணவர் ஒருவரை, தி.மு.க.,வைச் சேர்ந்த நபரும், அவரது நண்பர்களும் கத்தியால் குத்தியும், கடுமையாக தாக்கியும், கொலை செய்ய முயற்சித்துள்ளனர். இது, அதிர்ச்சி அளிக்கிறது.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவர் விரைவில் நலம்பெற வேண்டும். தி.மு.க., அரசின் ஊழல் நிர்வாகம் காரணமாக, பழுதடைந்த சாலையில் சென்றபோது தவறி விழுந்த மாணவர், தி.மு.க.,வை விமர்சித்ததால், அக்கட்சியினர் அவரை கொலை செய்ய முயன்றுள்ளனர்.

தி.மு.க., அரசின் நிர்வாக தோல்வியை விமர்சித்தால், மாணவரைக்கூட கொலை செய்வோம் எனும் அளவுக்கு, தி.மு.க.,வினர் அதிகார மமதையில் இருக்கின்றனர். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

தி.மு.க., தொண்டர் என்ற பெயரில், இதுபோன்ற சமூக விரோதிகளை வளர்த்து விடுவது, சமூகத்துக்கு பேராபத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது என்பதை முதல்வர் ஸ்டாலின் உணர வேண்டும்.

உடனே, பள்ளி மாணவர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியவர்கள், சமூகத்துக்கு என்றுமே அச்சுறுத்தலானவர்கள் என்பதை முதல்வர் உணர்ந்து, அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us