ADDED : மே 06, 2024 01:08 AM
பெரம்பலுார்: பெரம்பலுார் மாவட்டம், வேப்பூர் தி.மு.க., வடக்கு ஒன்றிய செயலராக இருப்பவர் மதியழகன். இவர், தி.மு.க.,வில் உள்ள வன்னியர்கள் மற்றும் நிர்வாகிகளை தரக்குறைவாக பேசிய நான்கு ஆடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆடியோவில் அவர் பேசுகையில், 'தி.மு.க.,வில் இருக்கும் வன்னியர்கள் மிக கேவலமானவர்கள். தி.மு.க.,வில் உள்ள மாவட்ட நிர்வாகிகள் சிலர், வேலை வாங்கி தருவதாக பலரிடம் பணம் பெற்று, சிலருக்கு மட்டும் வேலை வாங்கி தருகின்றனர். திட்டப்பணிகளில் வேலை முடிவதற்குள் கான்ட்ராக்டர்களிடம் கமிஷன் பெறுகின்றனர். தி.மு.க.,வை சேர்ந்த நிர்வாகி ஒருவர் பானை சின்னத்தை அழிக்க கூறினார்' என, பேசியிருந்தார்.
இந்த ஆடியோ தற்போது பரவி வருகிறது. வன்னியர்களை தரக்குறைவாக பேசியதற்கு, தங்க விஸ்வநாதன் என்பவர் சமூக வலைதளத்தில் இதை பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.