ADDED : பிப் 21, 2025 10:39 PM
சென்னையில் 49 தெலுங்கு, 24 உருது, 12 ஹிந்தி; நான்கு மலையாளம் மற்றும் குஜராத்தி வழி பள்ளிகள் உள்ளன. ஒரு சமஸ்கிருத பள்ளி செயல்பட்டு வருகிறது. உருது மொழி பள்ளிகள் தவிர, மற்றவை தனியார் பள்ளிகள். இவற்றில் பெரும்பாலானப் பள்ளிகள் மும்மொழி, பாடத்திட்டத்தில் செயல்பட்டு வருகின்றன.
உருது மொழியை பாடமாகக் கொண்ட, ஐந்து அரசு பள்ளிகளில், எழும்பூரில் உள்ள, அரசு பெண்கள் பள்ளியில், மும்மொழி பாடத்திட்டம் உள்ளது. திருவல்லிக்கேணி, அரசு பள்ளியில் உருதுவழி கல்வி; இங்கு தமிழ் கிடையாது. மீதமுள்ள மூன்று அரசு பள்ளிகளிலும், உருது மற்றும் ஆங்கில வழிக் கல்வி மட்டும் கற்பிக்கப்படுகிறது. இப்பள்ளிகளில் தமிழ்வழிக் கல்வி கிடையாது.
தமிழை தாய் மொழியாக கொண்டவர்களுக்கு மட்டும்தான், இருமொழிக் கல்வி. இதுவே, தி.மு.க.,வின் ஹிந்தி எதிர்ப்பு லட்சணம்.
எஸ்.ஆர்.சேகர், பொருளாளர், தமிழக பா.ஜ.,

