ADDED : ஏப் 13, 2024 02:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:தமிழக பா.ஜ., விவசாய அணி தலைவர் ஜி.கே.நாகராஜ் கூறியதாவது: கோவையில் அண்ணாமலைக்கு பெருகிவரும் ஆதரவை தி.மு.க.,வினரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.
கோவை ஆரம்பாளையத்தில் அண்ணாமலை உரிய அனுமதியுடன் 11ம் தேதி இரவு விதிகளுக்கு உட்பட்டு பிரசாரம் செய்தார். அங்கு பா.ஜ.,வுக்கு ஆதரவாக அதிக மக்கள் கூடினர். இதை தி.மு.க.,வினரே எதிர்பார்க்கவில்லை. அண்ணாமலைக்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து கொள்ள முடியாத தி.மு.க.,வினர், பா.ஜ.,வினர் கலவரம் செய்ய முயலுவதாக கூறி எங்கள் கட்சியினர் மீது பொய் புகார் அளித்துள்ளனர் என்றார்.

