ADDED : மே 14, 2024 11:57 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அண்மை காலமாக மோட்டார் வாகனங்கள், தானாக தீப்பற்றி எரியும் தீ விபத்துக்கள் நடக்கின்றன.
இதற்கு, மோட்டார் வாகனங்களை, தங்கள் இஷ்டம் போல, சி.என்.ஜி., - எல்.பி.ஜி.,யில் இயங்கும் வகையில் மாற்றுவது; அங்கீகரிக்கப்படாத அல்லது தகுதியில்லாத நிறுவனங்களில் செய்யும் மாற்றம் போன்றவையே இதற்கு காரணம் என, கண்டறியப்பட்டுள்ளது.
வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தின் உரிய அனுமதியின்றி வாகனங்களில் மாற்றம் செய்வது, மோட்டார் வாகன சட்டம் மற்றும் விதிகளின்படி குற்றம். எனவே, வாகன உரிமையாளர்கள், இவ்வகையான செயல்களில் ஈடுபட வேண்டாம்.
- அ. சண்முகசுந்தரம்,
போக்குவரத்து ஆணையர்.

