ADDED : மார் 28, 2024 09:59 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:கோடை காலம் துவங்கியதால், வெயில் சுட்டெரித்து வருகிறது. 'வாகனங்களின் பெட்ரோல் டேங்க்கில் முழுதுமாக பெட்ரோல் நிரப்புவதால், வெயிலில் பெட்ரோல் டேங்க் வெடித்து சிதறும்' என்ற தகவல், 'வாட்ஸாப்' வாயிலாக பரவி வருகிறது.
இந்தியன் ஆயில் நிறுவன அதிகாரி ஒருவர் கூறியதாவது:
மோட்டார் வாகன உற்பத்தி நிறுவனங்கள், பல்வேறு காலநிலை சூழலுக்கு ஏற்ப, அதிக வெயில், குளிரை தாங்கும் வகையில், உயர்தர பாதுகாப்பு அம்சங்களுடன் வாகனங்களில் பெட்ரோல் டேங்க்கை வடிவமைக்கின்றன.
கோடை காலம் வந்தாலே, 'பெட்ரோல் டேங்க்கில் முழுதுமாக பெட்ரோல் நிரப்ப வேண்டாம்' என்ற தவறான தகவல் தொடர்ந்து பரப்பப்பட்டு வருகிறது. இந்த தகவல், உண்மை அல்ல; அதை வாகன ஓட்டிகள் நம்ப வேண்டாம்.
இவ்வாறு அவர் கூறினார்.

