ADDED : மே 06, 2024 01:19 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகாசி: சிவகாசி அருகே நாரணாபுரத்தைச் சேர்ந்த தனியார் பஸ் டிரைவர் சுரேஷ் 36, மது அருந்தும் போது ஏற்பட்ட தகராறில் பீர் பாட்டிலால் குத்தி கொலை செய்யப்பட்டார்.
சிவகாசி சாத்துார் ரோட்டில் ஆள் நடமாட்டம் இல்லாத கட்டடத்தின் அருகே சுரேஷின் பிணம் கிடந்தது.
தகவலறிந்த கிழக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர்.
போலீசார் கூறியதாவது: சுரேஷ் மற்றும் 56 வீட்டு காலனியை சேர்ந்த பாலகிருஷ்ணன் 28, சுப்ரமணியபுரம் காலனி நந்தகுமார் 26, நாரணாபுரம் முனீஸ்வரன் காலனி கார்த்தீஸ்வரன் 21, பழனி 28, ஒன்றாக மது அருந்தி உள்ளனர்.
இதில் ஏற்பட்ட தகராறில் நான்கு பேரும் சுரேஷை பாட்டிலால் குத்தி கொலை செய்திருக்கலாம் என்றனர்.