கடன் பிரச்னையால் தந்தை - மகன் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி
கடன் பிரச்னையால் தந்தை - மகன் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி
ADDED : ஜூலை 16, 2024 02:20 AM

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் திருப்பாலைக்குடியை சேர்ந்த ேஷக் அப்துல் காதர் 39, கடன் பிரச்னையில் தனது 14 வயது மகனுடன் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.
ேஷக் அப்துல்காதர் 14 வயது மகனுடன் நேற்று காலை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். அப்போது கையில் வைத்திருந்த பெட்ரோல் கேனை திறந்து உடலில் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார். போலீசார் தடுத்து கேனை பறிமுதல் செய்தனர்.
விசாரணையில் திருப்பாலைக்குடியில் உள்ள ஒரு வங்கியில் வீடு, தொழில் கடனாக ரூ.63 லட்சம் பெற்றதாகவும், அப்பணத்தை கட்டத்தவறியதால் வீட்டை ஜப்தி செய்ய வங்கி முடிவு செய்துள்ளது. இப்பிரச்னையில் இருந்து மீள முடியவில்லை.
ஜப்தி நடவடிக்கையை கைவிட வலியுறுத்தி அதிகாரிகளிடம் தெரிவித்தும் பலனில்லை. இதனால் மகனுடன் தற்கொலை முயன்றதாக ேஷக் அப்துல்காதர் தெரிவித்தார். போலீசார் அவரை எச்சரித்து அனுப்பினர்.

