ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய ஊழியர் கைது
ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய ஊழியர் கைது
ADDED : ஆக 10, 2024 04:34 AM

கள்ளக்குறிச்சி: மின் இணைப்புக்கு ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின் வாரிய வணிக உதவியாளரை லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், கச்சிராயபாளையம் அடுத்த அம்மாபேட்டையை சேர்ந்தவர் ஷியாம் பிரபாகர்,35; இவர், வீட்டு மின் இணைப்பு வேண்டி கச்சிராயபாளையம் இளமின் வாரிய அலுவலகத்ததில் விண்ணப்பித்தார். அதன்பபேரில் ஷியாம் பிரபாகர் வீட்டை கள ஆய்வு செய்து மின்வாரிய வணிக உதவியாளர் வெங்கடாசலம் ரூ.15 ஆயிரம் லஞ்சம் கேட்டார்.
இதுகுறித்த ஷியாம் பிரபாகர், கள்ளக்குறிச்சி லஞ்ச ஒழிப்புத் துறை போலீசில் புகார் செய்தார்.
போலீசாரின் ஆலோசனைப்படி ரசாயனம் பூசப்பட்ட பணத்தை ஷியாம் பிரபாகர் நேற்று, மின்வாரி வணிக உதவியாளர் வெங்கடாசலத்திடம் கொடுத்தார். அந்த பணத்தை வாங்கிய வெங்கடாசலத்தை, டி.எஸ்.பி., சத்தியராஜ், இன்ஸ்பெக்டர் அருண்ராஜ் தலைமையிலான போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

