தனியாரிடமிருந்து மின் மீட்டர் வாங்கிக் கொள்ளலாமாம்
தனியாரிடமிருந்து மின் மீட்டர் வாங்கிக் கொள்ளலாமாம்
ADDED : ஆக 24, 2024 01:26 AM
சென்னை:தனியார் நிறுவனங்களிடம் இருந்து நுகர்வோர்கள், நேரடியாக மீட்டர் வாங்க, மின் வாரியம் அனுமதி அளித்துள்ளது.
புதிய மின் இணைப்பு வழங்கும் போது, மின் வாரியமே மீட்டர்களை பொருத்துகிறது. இதற்காக விண்ணப்பதாரர்களிடம் இருந்து, மின் இணைப்பு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மீட்டர் கொள்முதலில் தாமதம் ஏற்படுகிறது.
இது தவிர, அலுவலகங்களில் மீட்டர் இருந்தாலும், விண்ணப்பதாரரை அலைக்கழிக்க, 'மீட்டர் இல்லை' என, சில ஊழியர்கள் கூறுகின்றனர். இதனால் மின் இணைப்பு வழங்க தாமதம் ஆவதால், நுகர்வோர்கள் பாதிக்கப்படுகின்றனர்.
வாரியத்திற்கும் வருவாய் இழப்பு ஏற்படுகிறது. புதிய மின் இணைப்பு வழங்கும் பணியை விரைந்து மேற்கொள்ள பொறியாளர்களுக்கு, மின் வாரியம் உத்தரவிட்டுஉள்ளது.
எனவே வீடு, தொழிற்சாலை உள்ளிட்ட நுகர்வோர்கள், புதிய மின் இணைப்புக்கு விண்ணப்பிக்கும் போது, ஒரு முனை மற்றும் மும்முனை மீட்டர்களை, தனியார் நிறுவனங்களிடம் இருந்து நேரடியாக வாங்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
எந்தெந்த நிறுவனங்களிடம் இருந்து வாங்க வேண்டும் என்ற விபரம், மின் வாரியத்தின் இணையதளத்தில் தெரிவிக்கப்படும்.