ADDED : ஜூலை 12, 2024 02:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் பணியாளர்கள், அதிகாரிகள் மற்றும் நிர்வாகம் இடையே இணக்கமான சூழலை உருவாக்கி, பணியாளர்களின் பணித்திறனை மேம்படுத்தவும், குறைகளுக்கு தீர்வு காணவும், இரு மாதங்களுக்கு ஒரு முறை மண்டல அளவில் பணியாளர் நாள் நிகழ்வு நடத்த, இணை பதிவாளர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
அந்த நாளில் பெறப்பட்ட மனுக்கள், தீர்வு செய்யப்பட்ட மனுக்கள் தொடர்பாக விவாதிக்கப்பட்டு, கூட்ட தீர்மானம் பதியப்பட வேண்டும். அதில், இணை பதிவாளர் கையெழுத்திட வேண்டும். பெறப்பட்ட விண்ணப்பம் மீது, இரு மாதங்களுக்குள் தீர்வு காணப்பட வேண்டும்.
மனுக்கள் எந்த காரணத்திற்காக நிராகரிக்கப்படுகிறது என்பதை தெளிவாக குறிப்பிட்டு, மனுதாரர்களுக்கு பதில் அனுப்பி இணையதளத்தில் பதிவிட, அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது.
-பெரியகருப்பன்
கூட்டுறவு துறை அமைச்சர்

