தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ இன்ஜினியரிங் கவுன்சிலிங் வழிகாட்டி நிகழ்ச்சி 22ல் சென்னையில் 2 இடங்களில் நடக்கிறது

இன்ஜினியரிங் கவுன்சிலிங் வழிகாட்டி நிகழ்ச்சி 22ல் சென்னையில் 2 இடங்களில் நடக்கிறது

இன்ஜினியரிங் கவுன்சிலிங் வழிகாட்டி நிகழ்ச்சி 22ல் சென்னையில் 2 இடங்களில் நடக்கிறது


ADDED : ஜூன் 15, 2024 01:31 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 15, 2024 01:31 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை:இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில், விருப்பமான கல்லுாரிகள் மற்றும் பாடப்பிரிவுகளை தேர்வு செய்வது குறித்து விளக்கம் அளிக்கும், 'தினமலர்' நாளிதழின் வழிகாட்டி நிகழ்ச்சி, வரும் 22ம் தேதி சென்னையில் இரண்டு இடங்களில் நடக்கிறது.

அண்ணா பல்கலை இணைப்பில் செயல்படும் இன்ஜினியரிங் கல்லுாரிகளில், பி.இ., - பி.டெக்., படிப்புகளில் சேர விண்ணப்பித்துள்ள மாணவர்கள், 'ஆன்லைன்' கவுன்சிலிங்கில், தங்களுக்கு விருப்பமான கல்லுாரிகள் மற்றும் பாடப்பிரிவுகளை தேர்வு செய்வது குறித்து, விரிவான விளக்கம் அளிக்கும் வகையில், 'தினமலர்' நாளிதழ் சார்பில், இன்ஜினியரிங் கவுன்சிலிங் வழிகாட்டி நிகழ்ச்சி ஆண்டுதோறும் நடக்கிறது.

தியாகராய அரங்கு


இந்த ஆண்டுக்கான நிகழ்ச்சி, சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்லுாரியுடன் இணைந்து, வரும் 22ம் தேதி, சென்னை தி.நகர் சர்.பிட்டி.தியாகராயா அரங்கில், காலை 10:00 முதல் மதியம், 1:00 மணி வரை நடக்கிறது.

இதையடுத்து, தாம்பரம் ராஜாஜி சாலையில் உள்ள, டி.ஜி.பி. கல்யாண மண்டபத்தில் பிற்பகல் 3:00 முதல் மாலை, 6:00 மணி வரை நடக்கிறது. இந்நிகழ்ச்சியில், தமிழக இன்ஜினியரிங் கவுன்சிலிங் கமிட்டி செயலர் பேராசிரியர் புருஷோத்தமன், இன்ஜினியரிங் நடைமுறைகள் குறித்து விரிவான விளக்கம் தர உள்ளார்.

இன்ஜினியரிங்கில் வேலைவாய்ப்புகள் மிகுந்த பாடப்பிரிவுகள் குறித்து, கல்வி ஆலோசகர் ஆர்.அஸ்வின் ஆலோசனை வழங்க உள்ளார்.

எதிர்காலம்


இந்த ஆண்டு எந்த படிப்புக்கு மவுசு அதிகம்; எந்த பாடப்பிரிவுக்கு எதிர்காலம் சிறப்பாக உள்ளது; முக்கிய இன்ஜினியரிங் படிப்புகளுக்கான வாய்ப்புகள் எப்படி; சிறந்த கல்லுாரியை தேர்வு செய்வது எப்படி என்ற விபரங்களை, இந்த நிகழ்ச்சியில் மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம்.

நிகழ்ச்சியில் பங்கேற்க எந்த கட்டணமும் இல்லை. இந்த செய்தியில் இணைக்கப்பட்டுள்ள, கியூ.ஆர்., குறியீட்டை, 'ஸ்கேன்' செய்து, அதில் இணைக்கப்பட்ட பக்கத்தில், மாணவர்களின் பெயர், மொபைல் போன் எண் மற்றும் முகவரியை குறிப்பிட்டு, முன்பதிவு செய்யலாம்.

மேலும், https://forms.gle/gCMdG14jGpsHE8mV9 என்ற இணையதள இணைப்பிலும், முன்பதிவு செய்யலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us