'செத்தாலும் சொந்த சின்னத்தில் தான் நிற்பேன்': வைகோ மகனை கதற வைத்த தி.மு.க.,?
'செத்தாலும் சொந்த சின்னத்தில் தான் நிற்பேன்': வைகோ மகனை கதற வைத்த தி.மு.க.,?
ADDED : மார் 25, 2024 05:51 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருச்சி : ''நான் சுயமரியாதைக்காரன், செத்தாலும் சொந்த சின்னத்தில் தான் நிற்பேன்,'' என்று, ம.தி.மு.க., திருச்சி வேட்பாளர் துரை கதறிய அழுதபடி ஆவேசமாக பேசினார்.
தி.மு.க., கூட்டணியில், திருச்சி லோக்சபா தொகுதி ம.தி.மு.க.,வுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அக்கட்சி சார்பில், வைகோவின் மகனும், கட்சியின் முதன்மை செயலருமான துரை போட்டியிடுகிறார். தேர்தல் கமிஷன் ம.தி.மு.க.,வுக்கு இன்னும் சின்னம் ஒதுக்கவில்லை. ஆகையால், சின்னம் இல்லாமல் ஓட்டு எப்படி கேட்பது என்ற குழப்பம், தி.மு.க., கூட்டணி கட்சியினர் இடையே நிலவுகிறது.
இந்நிலையில், திருச்சி லோக்சபா தொகுதி, தி.மு.க., கூட்டணி கட்சிகளின் செயல் வீரர்கள் கூட்டம், திருச்சி அறிவாலயத்தில் நேற்று நடந்தது. இதில், அமைச்சர்கள் நேரு, மகேஷ் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.

