ADDED : ஆக 07, 2024 02:51 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மன பயமா... குழப்பமா... என பிரச்னையின் விளிம்பில் நிற்பவர்கள் கிருஷ்ணகிரி ஏழுபிள்ளை மாரியம்மனை தரிசியுங்கள். தீர்வு உடனே கிடைக்கும். 17 ம் நுாற்றாண்டில் கட்டப்பட்ட இது 18 கிராமங்களுக்கு சொந்தமானது.
ஆடி மாதத்தில் சிறப்பு பூஜைகள் நடக்கும். ஐந்து கரகம் எடுத்து வரப்பட்டு பொங்கல் திருவிழா நடக்கும். கோயிலின் முன் பழங்கால கல்துாண்கள் 18 உள்ளன. இங்கு ஆண்டு தோறும் காளை பிடிக்கும் விளையாட்டு நடக்கும். அதற்கான மாடுகளை இந்த துாணில் கட்டுகின்றனர். 7 ஆண்டுக்கு ஒருமுறை இங்கு மாவிளக்கு ஊர்வலம் நடக்கிறது.
எப்படி செல்வது
கிருஷ்ணகிரி பஸ் ஸ்டாண்டிற்கு அருகில் உள்ளது.
நேரம்: காலை 7:00 - 11:00 மணி மாலை 5:00 - 7:00 மணி
தொடர்புக்கு
94860 93494