UPDATED : மார் 15, 2025 12:53 AM
ADDED : மார் 15, 2025 12:48 AM
மேம்பட்ட வளர்ச்சிக்கு எல்லார்க்கும் எல்லாம்
எல்லார்க்கும்
எல்லாம் என்ற உயர்ந்த நோக்கத்துடன், தமிழகத்தின் மேம்பட்ட எதிர்கால
வளர்ச்சிக்கு உறுதியான அடித்தளம் அமைந்திருக்கிறது தமிழக பட்ஜெட்.
மகளிர்
நலன் காக்கும் மாபெரும் திட்டங்கள், ததும்பி வழியும் தமிழ் பெருமிதம்,
இளைஞர்களுக்கு உலகை வெல்லும் உயர் தொழில்நுட்பம், வேலைவாய்ப்புகளை அள்ளி
தரும் தொழில் பூங்காக்கள், புதிய நகரம், புதிய விமான நிலையம், புதிய
நீர்த்தேக்கம், அதிவேக ரயில் சேவை என, நவீன தமிழகத்தை உருவாக்கும்
முன்முயற்சிகள் எடுக்கப்பட்டு உள்ளன.
விளிம்பு நிலை மக்களை
அரவணைக்கும் தாயுமானவரின் கரங்கள் என, அனைவருக்குமான திட்டங்கள்
அறிவிக்கப்பட்டு உள்ளன. எல்லார்க்கும் எல்லாம் என்ற உயர்ந்த நோக்கத்துடன்,
தமிழகத்தின் மேம்பட்ட எதிர்கால வளர்ச்சிக்கு உறுதியான அடித்தளம்
அமைத்திருக்கிறது, தமிழக பட்ஜெட்.
- ஸ்டாலின் தமிழக முதல்வர்