பெண் மீது வெடிப்பொருள் வீச்சு குள்ளஞ்சாவடி அருகே பரபரப்பு
பெண் மீது வெடிப்பொருள் வீச்சு குள்ளஞ்சாவடி அருகே பரபரப்பு
ADDED : மே 13, 2024 04:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குள்ளஞ்சாவடி: குள்ளஞ்சாவடி அருகே பெண் மீது வெடிப்பொருள் பை வீசிய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்
கடலுார் மாவட்டம், குள்ளஞ்சாவடி அடுத்த, அம்பலவாணன்பேட்டை நடுத்தெருவை சேர்ந்தவர் திருவேங்கடம் மனைவி லதா, 45. இவர், கடந்த 9ம் தேதி இரவு, வீட்டின் அருகே நின்றிருந்தார். அப்போது பைக்கில் நின்றிருந்த 4 பேர், லதா மீது வெடிபொருட்கள் இருந்த பையை வீசிவிட்டு தப்பி சென்றனர்.
இது குறித்து லதா கொடுத்த புகாரில், குள்ளஞ்சாவடி போலீசார் வழக்கு பதிந்து, வெடிப்பொருட்கள் அடங்கிய பை வீசிய நபர்களை தேடி வருகின்றனர்.