sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

சென்னை - நெல்லை உட்பட 6 சிறப்பு ரயில்கள் நீட்டிப்பு

/

சென்னை - நெல்லை உட்பட 6 சிறப்பு ரயில்கள் நீட்டிப்பு

சென்னை - நெல்லை உட்பட 6 சிறப்பு ரயில்கள் நீட்டிப்பு

சென்னை - நெல்லை உட்பட 6 சிறப்பு ரயில்கள் நீட்டிப்பு


ADDED : ஆக 16, 2024 12:57 AM

Google News

ADDED : ஆக 16, 2024 12:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:பயணியரின் நெரிசல் கருதி, சென்னை எழும்பூர் - திருநெல்வேலி உட்பட, ஆறு சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.

 திருநெல்வேலி - சென்னை எழும்பூருக்கு வியாழன்தோறும் இயக்கப்படும் சிறப்பு ரயில், வரும் 22 முதல் அடுத்த மாதம் 5ம் தேதி வரை; எழும்பூர் - திருநெல்வேலிக்கு வெள்ளிக்கிழமைகளில் இயக்கப்படும் சிறப்பு ரயில் வரும் 23 முதல் அடுத்த மாதம் 6ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது

 சென்னை எழும்பூர் - வேளாங்கண்ணிக்கு வாரந்தோறும் வெள்ளி, ஞாயிறுகளில் இயக்கப்படும் சிறப்பு ரயில், வரும் 23 முதல் அடுத்த மாதம் 8ம் தேதி வரை; வேளாங்கண்ணி - எழும்பூருக்கு வாரந்தோறும் சனி, திங்கள் கிழமைகளில் இயக்கப்படும் சிறப்பு ரயில், வரும் 24 முதல் அடுத்த மாதம் 9ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது

 தாம்பரம் - ராமநாதபுரத்துக்கு வியாழன், சனிதோறும் இயக்கப்படும் சிறப்பு ரயில், வரும் 29 முதல் அடுத்த மாதம் 14ம் தேதி வரை; ராமநாதபுரம் - தாம்பரத்துக்கு வெள்ளி, ஞாயிறுகளில் இயக்கப்படும் சிறப்பு ரயில், வரும் 30 முதல் அடுத்த மாதம், 15ம் தேதி வரை நீட்டித்து இயக்கப்படுகிறது.

இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு துவங்கி விட்டதாக, தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.






      Dinamalar
      Follow us