ADDED : ஜூன் 19, 2024 02:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:கர்நாடகா மாநிலம் ஹூப்ளி - ராமேஸ்வரம் வாரந்திர ரயில் சேவை நீட்டித்து இயக்கப்படும் என, தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
l ஹூப்ளியில் இருந்து வாரந்தோறும் சனிக்கிழமைகளில் காலை 6:30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் காலை 6:15க்கு ராமேஸ்வரம் செல்லும். இந்த ரயில் ஜூலை 6ம் தேதி முதல் டிசம்பர், 28ம் தேதி வரை நீட்டித்து இயக்கப்படும்.
l ராமேஸ்வரத்தில் இருந்து வாரந்தோறும் ஞாயிறுகளில் இரவு 9:00க்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் இரவு 7:25 மணிக்கு ஹூப்ளி செல்லும், இந்த ரயில் ஜூலை 7ம் தேதி முதல் டிச., 29ம் தேதி வரை நீட்டித்து இயக்கப்படும். சிறப்பு ரயில்களில் டிக்கெட் முன்பதிவு துவங்கி உள்ளது.

