புதிய பாதை இறுதி கட்ட பணி; 16 ரயில்கள் சேவையில் மாற்றம்
புதிய பாதை இறுதி கட்ட பணி; 16 ரயில்கள் சேவையில் மாற்றம்
ADDED : மார் 05, 2025 05:08 AM

சென்னை : புதிய பாதை பணிகளால், வைகை, நெல்லை உட்பட, 16 விரைவு ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து, தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை: சென்னை கடற்கரை - எழும்பூர் இடையே, நான்காவது புதிய பாதைக்கான இறுதிக்கட்ட பணிகள் நடக்கின்றன. இதனால், வரும் 6, 7, 8ம் தேதிகளில் சில ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
↓காரைக்குடி - எழும்பூர் பல்லவன் ரயில் நாளை, நாளை மறுநாள் தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும்
↓மன்னார்குடி - எழும்பூர்; ராமேஸ்வரம் - எழும்பூர்; புதுச்சேரி - எழும்பூர் பயணியர் ரயில்கள், வரும் 8ம் தேதி தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும்
↓திருநெல்வேலி - எழும்பூர், நெல்லை விரைவு ரயில், 8ம் தேதி செங்கல்பட்டு வரை மட்டுமே இயக்கப்படும்
↓ஹைதராபாத் - தாம்பரம் சார்மினார் ரயில், 8ம் தேதி கடற்கரை வரை மட்டுமே இயக்கப்படும்
↓துாத்துக்குடி - எழும்பூர் ரயில், 8ம் தேதி மாம்பலம் வரை மட்டுமே இயக்கப்படும்
↓எழும்பூர் - மதுரை வைகை விரைவு ரயில், வரும் 6, 7ம் தேதிகளில் தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும்
↓தாம்பரம் - ஹைதராபாத் சார்மினார் ரயில், 9ம் தேதி சென்னை கடற்கரையில் இருந்து இயக்கப்படும்
↓எழும்பூர் - ராமேஸ்வரம், எழும்பூர் - புதுச்சேரி ரயில்கள், 9ம் தேதி தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும்
↓தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத் - ராமநாதபுரம் சிறப்பு ரயில் இன்றும், காக்கிநாடா போர்ட் - செங்கல்பட்டு, காச்சிகுடா - செங்கல்பட்டு ரயில்கள், 8ம் தேதி மாற்றுப்பாதையில் இயக்கப்படுவதால், எழும்பூர், தாம்பரம் செல்லாது. பெரம்பூர் சென்று, அரக்கோணம், காட்பாடி வழியாக இயக்கப்படும்
↓எழும்பூர் - திருநெல்வேலி வந்தேபாரத் ரயில், வரும் 6, 7ம் தேதிகளில், 15 நிமிடங்கள் தாமதமாக, மாலை 3:00 மணிக்கு புறப்பட்டுச் செல்லும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சென்னை, மார்ச் 5-
புதிய பாதை பணிகளால், வைகை, நெல்லை உட்பட, 16 விரைவு ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து, தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை:
சென்னை கடற்கரை - எழும்பூர் இடையே, நான்காவது புதிய பாதைக்கான இறுதி கட்ட பணிகள் நடக்கின்றன. இதனால், வரும் 6, 7, 8ம் தேதிகளில் சில ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
★ காரைக்குடி - எழும்பூர் பல்லவன் ரயில் நாளை, நாளை மறுநாள் தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும்
★ மன்னார்குடி - எழும்பூர்; ராமேஸ்வரம் - எழும்பூர்; புதுச்சேரி - எழும்பூர் பயணியர் ரயில்கள், வரும் 8ம் தேதி தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும்
★ திருநெல்வேலி - எழும்பூர், நெல்லை விரைவு ரயில், 8ம் தேதி செங்கல்பட்டு வரை மட்டுமே இயக்கப்படும்
★ ஐதராபாத் - தாம்பரம் சார்மினார் ரயில், 8ம் தேதி கடற்கரை வரை மட்டுமே இயக்கப்படும்
★ துாத்துக்குடி - எழும்பூர் ரயில், 8ம் தேதி மாம்பலம் வரை மட்டுமே இயக்கப்படும்
★ எழும்பூர் - மதுரை வைகை விரைவு ரயில், வரும் 6, 7ம் தேதிகளில் தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும்
★ தாம்பரம் - ஐதராபாத் சார்மினார் ரயில், 9ம் தேதி சென்னை கடற்கரையில் இருந்து இயக்கப்படும்
★ எழும்பூர் - ராமேஸ்வரம், எழும்பூர் - புதுச்சேரி ரயில்கள், 9ம் தேதி தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும்
★ தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத் - ராமநாதபுரம் சிறப்பு ரயில் இன்றும், காக்கிநாடா போர்ட் - செங்கல்பட்டு, காச்சிகுடா - செங்கல்பட்டு ரயில்கள், 8ம் தேதி மாற்றுப்பாதையில் இயக்கப்படுவதால், எழும்பூர், தாம்பரம் செல்லாது. பெரம்பூர் சென்று, அரக்கோணம், காட்பாடி வழியாக இயக்கப்படும்
★ எழும்பூர் - திருநெல்வேலி வந்தேபாரத் ரயில், வரும் 6, 7ம் தேதிகளில், 15 நிமிடங்கள் தாமதமாக, மாலை 3:00 மணிக்கு புறப்பட்டு செல்லும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.