ADDED : செப் 06, 2024 02:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:மோசடி தொடர்பாக தலைமறைவாக இருந்த, நியோ மேக்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவன இயக்குனர் கைது செய்யப்பட்டார்.
மதுரையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்ட நியோ மேக்ஸ் என்ற நிதி நிறுவனம் மற்றும் அதன் துணை நிறுவன இயக்குனர்கள், 260 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்துள்ளனர்.
இதுகுறித்து, பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து, நியோ மேக்ஸ் இயக்குனர்கள் கமலக்கண்ணன், வீரசக்தி உட்பட, 27 பேரை கைது செய்துள்ளனர்.
ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த, நியோ மேக்ஸ் தொடர்புடைய துணை நிறுவனத்தின் இயக்குனர்கள் சார்லஸ், இளையராஜா உட்பட நான்கு பேர் ஏப்ரலில் கைது செய்யப்பட்டனர்.
தலைமறைவாக இருந்த இயக்குனர்களில் ஒருவரான மகாலிங்கம், நேற்று கைது செய்யப்பட்டார்.