நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி:கிழக்கு டில்லி லட்சுமி நகரில், வி 3 எஸ் வணிக வளாகத்தின் மூன்றாவது மாடியில் உள்ள 'டோனிக் பீட்சா' கடை சமையலறையில் நேற்று காலை, 11:00 மணிக்கு தீப்பற்றியது. கரும்புகை வளாகம் முழுதும் சூழந்ததால் மக்கள் அலறியடித்து ஓடினர்.
ஐந்து வண்டிகளில் வந்த தீயணைப்புப் படையினர், 11:40 மணிக்கு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த விபத்தில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. பர்னிச்சர் மற்றும் உணவுப் பொருட்கள் தீயில் எரிந்து நாசம் அடைந்தன. தீப்பற்றியதற்காக காரணம் குறித்து விசாரணை நடக்கிறது. மீண்டும் தீப்பிடிப்பதைத் தடுக்க குளிரூட்டும் பணிகள் நடந்தன.