ADDED : ஆக 04, 2024 12:34 AM
சென்னை:சென்னையில் உள்ள மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
சென்னை விமான நிலையத்தில், கடந்த சில மாதங்களாகவே கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்படுவது அதிகரித்து வருகிறது. இதற்கிடையே, 60 நாட்களில் 167 கோடி ரூபாய் மதிப்பிலான, 267 கிலோ தங்கம் கடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
கடத்தலில் ஈடுபட்ட சென்னையைச் சேர்ந்த 'யு டியூபர்' சபீர் அலி உட்பட ஒன்பது பேரை கைது செய்து, சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை விமான நிலையத்தில், 'ஏர்ஹப்' என்ற பரிசு பொருட்கள் கடை நடத்த, பா.ஜ., பிரமுகர் பிரித்வி உதவியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
அவர் தொடர்புடைய வணிக வளாக கடைகளில் சோதனை நடத்தப்பட்டு, முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்நிலையில், கடந்த மாதத்தில் விமான நிலைய சுங்க அதிகாரிகள் சிலர், துறைமுகம் உட்பட சில இடங்களுக்கு மாற்றம் செய்யப்பட்டனர். அதை தொடர்ந்து, மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் ஐந்து பேர் நேற்று இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.