ADDED : மே 30, 2024 11:36 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:திண்டுக்கல், திருச்சி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில், நேற்று காட்டுத் தீ ஏற்பட்டதாக, வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், கோடை வெயிலின் தாக்கம் உச்சத்தை தொட்டிருக்கும் நிலையில், மீண்டும் காட்டுத் தீ சம்பவங்கள் அதிகரிக்க துவங்கி உள்ளன.
நேற்று திண்டுக்கல் மாவட்டம் பழனி, திருச்சி மாவட்டம் யேவூர், செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம், காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதுார் ஆகிய இடங்களில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது.
தகவல் கிடைத்ததும், அந்தந்த மாவட்ட அதிகாரிகள் கள பணியில் இறங்கியதாக, வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
கோடையின் தாக்கம் அதிகரிக்கும் நிலையில், காட்டுத் தீ சம்பவங்கள் மீண்டும் அதிகரிக்குமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.