மசினகுடியில் வனத்தீ: கட்டுப்படுத்த வன ஊழியர்கள் போராட்டம்
மசினகுடியில் வனத்தீ: கட்டுப்படுத்த வன ஊழியர்கள் போராட்டம்
ADDED : ஏப் 06, 2024 10:10 PM

கூடலூர்:முதுமலை, மசினகுடி சீகூர் வனப்பகுதியில் ஏற்பட்டுள்ள, வனத்தீயை கட்டுப்படுத்தும் பணியில் 60க்கும் மேற்பட்ட வன ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகம் ஊட்டி மற்றும் மசினகுடி கோட்டங்களில் கோடை மழை பொய்த்ததின் காரணமாக கோடை மழை பொய்த்ததின் காரணமாக வறட்சியின் தாக்கம் அதிகரித்துள்ளது.வனவிலங்குகளுக்கு உணவு, குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வனத்தீயை தடுக்க வனத்துறையினர் தீ தடுப்பு கோடுகள் அமைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் மசினகுடி கோட்டம் சீகூர் வனச்சரகத்தை ஒட்டிய, நீலகிரி வனக்கோட்டம் கட்டப்பட்டு வனப்பகுதியில் நேற்று முன்தினம், வனத்தீ ஏற்பட்டு, எரிந்தது. வன ஊழியர்கள், தீயை கட்டுப்படுத்த போராடி வருகின்றனர்.
இந்நிலையில், அப்பகுதியில் ஏற்பட்ட வனத்தீ நேற்று, மாலை முதுமலை மசினகுடி சீகூர் வனப்பகுதிக்குள் பரவியது. தகவல் அறிந்த சீகுரு வனச்சரகர் தயானந்தன் தலைமையில், 60க்கும் மேற்பட்ட வன ஊழியர்கள், தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுப்படு வருகின்றனர்.
ஆனால், கடும் வறட்சி கரணமாக தீயை கட்டுப்படுத்துவதிலும், பரவுவதை தடுப்பதில் கடும் சிரமம் ஏற்பட்டுள்ளது. ஆனாலும், வன ஊழியர்கள் தீயை கட்டுப்படுத்தும் பணியில் தொடர்ந்து போராடி வருகின்றனர். மேலும், கூடுதல் வன ஊழியர்களையும் அழைத்துள்ளனர்.

