ADDED : மே 02, 2024 02:10 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:தமிழக காவல் துறையின் ஓய்வு பெற்ற டி.ஜி.பி., கருணாசாகரும், அவரது மனைவியும் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தனர்.
பீஹார் மாநிலத்தைச் சேர்ந்தவர் கருணாசாகர். தமிழக ஐ.பி.எஸ்., அதிகாரியான இவர், காவலர் நலப்பிரிவு, டி.ஜி.பி.,யாக பணிபுரிந்து ஓய்வு பெற்றார்.
அதன்பின், லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சியில் சேர்ந்தார். அக்கட்சியில் இருந்து விலகிய அவர், நேற்று காங்கிரசில் சேர்ந்தார். அவரது மனைவி அஞ்சுவும், அக்கட்சியில் சேர்ந்து உள்ளார்.

