டோல்கேட்டை அகற்ற போராடிய 'மாஜி' அமைச்சர் உதயகுமார் கைது
டோல்கேட்டை அகற்ற போராடிய 'மாஜி' அமைச்சர் உதயகுமார் கைது
ADDED : ஜூலை 31, 2024 12:36 AM
திருமங்கலம்:மதுரை மாவட்டம், கப்பலுார் டோல்கேட்டை இடமாற்றம் செய்ய வலியறுத்தி, திருமங்கலம் பகுதி மக்கள் போராடி வருகின்றனர். பல்வேறு பேச்சுகள் தோல்வியில் முடிந்தன.
நேற்று திருமங்கலத்தைச் சேர்ந்த 28 சங்கங்கள் மற்றும் எதிர்ப்பு குழுவினர் கடையடைப்புக்கு அழைப்பு விடுத்தனர். அதன்படி, கடையடைப்பு நடந்தது.
இதற்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர் உதயகுமார் தலைமையில் அ.தி.மு.க.,வினர் கப்பலுார் டோல்கேட் பகுதியில் மறியல் செய்ய முயன்றனர்.
இதையடுத்து உதயகுமார் உட்பட 400 பேர் கைது செய்யப்பட்டனர்.
உதயகுமார் உட்பட பலரையும் மேலக்கோட்டையில் உள்ள கல்யாண மண்டபத்தில் போலீசார் தங்க வைத்திருந்தனர். அவர்களை சந்திக்கச் சென்ற யாரையும் போலீசார் அனுமதிக்காததை அடுத்து, அங்கு கூடியிருந்த பொதுமக்கள், நான்கு வழிச் சாலைக்குச் சென்று மறியலில் ஈடுபட்டனர். இதனால், அரை மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.
கைதானோரில், இந்திய கம்யூ., - பா.ஜ., - நாம் தமிழர் கட்சிகளைச் சேர்ந்தோரும் அடக்கம்.

