அண்ணாமலை வெற்றிக்காக குழு அமைத்து கோவையில் வியூகம்
அண்ணாமலை வெற்றிக்காக குழு அமைத்து கோவையில் வியூகம்
ADDED : ஏப் 06, 2024 06:01 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: லோக்சபா தேர்தலில், கோவையில், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை போட்டியிடுகிறார்.
பிரசாரத்தில் தீவிரமாக சுழன்று கொண்டிருக்கும் அவரின் வெற்றிக்காக கட்சியின் சார்பில் புதிய வியூகங்கள் வகுக்கப்பட்டு உள்ளன.
இதற்காக கோவையில், பா.ஜ., முக்கிய ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. அதில், மாநில அமைப்பு பொதுச்செயலர் கேசவவிநாயகன் உட்பட மூத்த நிர்வாகிகள் பங்கேற்றனர். அதில் தான், அண்ணாமலையின் வெற்றிக்கான வியூகங்கள் வகுக்கப்பட்டு உள்ளன.

