sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 22, 2025 ,கார்த்திகை 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

நான்கைந்து எம்.எல்.ஏ.,க்கள் ஏமாற்றம் ஐந்தாறு அமைச்சர்கள் நிம்மதி

/

நான்கைந்து எம்.எல்.ஏ.,க்கள் ஏமாற்றம் ஐந்தாறு அமைச்சர்கள் நிம்மதி

நான்கைந்து எம்.எல்.ஏ.,க்கள் ஏமாற்றம் ஐந்தாறு அமைச்சர்கள் நிம்மதி

நான்கைந்து எம்.எல்.ஏ.,க்கள் ஏமாற்றம் ஐந்தாறு அமைச்சர்கள் நிம்மதி


ADDED : ஆக 22, 2024 07:02 PM

Google News

ADDED : ஆக 22, 2024 07:02 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழக தலைமை அலுவலகத்தில், கட்சிக் கொடியை , நடிகர் விஜய் அறிமுகப்படுத்தினார். இந்த நிகழ்ச்சி, தொலைக்காட்சிகளில் நேரலை செய்யப்பட்டது. அதேநேரத்தில், தமிழக அமைச்சரவையில் மாற்றம் என்ற, 'பிரேக்கிங்' செய்தியும் வெளியிடப்பட்டது.

மூத்த அமைச்சர் ஒருவர் உட்பட, மூன்று பேர் மாற்றப்படுகின்றனர்; அவர்களுக்கு பதிலாக புதியவர்கள் சேர்க்கப்படுகின்றனர்; சிலரது இலாகாக்கள் மாற்றப்படுகின்றன என்ற தகவல் பரவியதால், யார் அந்த மூத்த அமைச்சர், புதிய அமைச்சர்கள் யார் என்ற கேள்விகளும், விவாதங்களும் அரசியல் வட்டாரத்தில் சூட்டை கிளப்பின.

இதுகுறித்து, தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது:

முதல்வர் ஸ்டாலின், அமெரிக்காவுக்கு செல்லும் முன், உதயநிதியை துணை முதல்வராக்க வேண்டும் என, அவரது குடும்பத்தில் திட்டமிடப்பட்டது. செந்தில் பாலாஜிக்கு ஜாமின் கிடைத்ததும் அவரை சேர்க்கும் விதமாக, அமைச்சரவையில் மாற்றம் செய்யவும், துணை முதல்வர் பதவியை துரைமுருகனுக்கு தரவும், முதல்வர் திட்டமிட்டதாக தெரிகிறது.

ஆனால், புதிய அமைச்சராக யாரை நியமிப்பது என்பதில் இழுபறி ஏற்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் நாசர், பூந்தமல்லி எம்.எல்.ஏ., கிருஷ்ணசாமி, திருவள்ளூர் எம்.எல்.ஏ., பி.வி.ராஜேந்திரன், பனைமரத்துபட்டி ராஜேந்திரன், கோவி செழியன், துரை சந்திரசேகரன், சங்கரன்கோவில் ராஜா, காதர்பாட்ஷா என்ற முத்துராமலிங்கம் ஆகியோர் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு உள்ளன.

மாற்றப்படும் அமைச்சர்கள் பட்டியலில், காந்தி, கயல்விழி, மஸ்தான், சி.வி.கணேசன், மனோ தங்கராஜ், மதிவேந்தன் உள்ளிட்டோர் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் மூத்த பத்திரிகையாளர் ஒருவர், இதுதொடர்பாக முதல்வரிடம் பேசி, 'அமைச்சரவையில் மாற்றம் இல்லை' என்ற பதிலை பெற்று, சமூக வலைதளங்களில் பதிவு செய்தார். அதன்பின், மாற்றம் இல்லை என்ற செய்தி பரவத் துவங்கியதும், அமைச்சர் பதவி எதிர்பார்த்த நான்கைந்து எம்.எல்.ஏ.,க்கள் ஏமாற்றம் அடைந்தனர். அதேநேரத்தில், பதவி போய் விடுமோ என்ற பதைபதைப்பில் இருந்த ஐந்தாறு அமைச்சர்கள் நிம்மதி அடைந்தனர்.

இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.

'எனக்கு தெரியாது!'


''தமிழக அமைச்சரவை மாற்றம் குறித்து, எனக்கு தகவல் வரவில்லை,'' என, முதல்வர் ஸ்டாலின் கிண்டலாக பதில் அளித்தார். சென்னை எழிலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பின், முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது:
அமைச்சரவை மாற்றம் குறித்து எனக்கு தகவல் வரவில்லை. மாநில பேரிடர் மையத்தில், அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. தேவையான வசதிகளை மேலும் கொண்டு வருவோம். அதற்காகவே பேரிடர் கட்டுப்பாட்டு மையம் துவங்கியுள்ளோம். சென்னையை தொடர்ந்து திருச்சி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களுக்கும் படிப்படியாக கொண்டு வருவோம். கருணாநிதி நாணயம் வெளியீட்டு விழாவை யார் நடத்தியது என்ற கேள்வி எழுப்பப்படுகிறது.
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் அந்த நிகழ்ச்சியை, தமிழக அரசு நடத்தியது. அமெரிக்க பயணத்தின் போது முதலீட்டாளர்களை சந்திக்கவுள்ளோம். அங்கிருந்து வந்த பின், மேலும் விவரங்களை சொல்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.



- நமது நிருபர் -






      Dinamalar
      Follow us