சென்னை உயர் நீதிமன்றத்திற்கு நான்கு நிரந்தர நீதிபதிகள் நியமனம்
சென்னை உயர் நீதிமன்றத்திற்கு நான்கு நிரந்தர நீதிபதிகள் நியமனம்
ADDED : மார் 05, 2025 05:10 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை; சென்னை உயர் நீதிமன்றத்தில், கூடுதல் நீதிபதிகளாக பணிபுரிந்து வரும், ஆர்.சக்திவேல், பி.தனபால், சி.குமரப்பன், கே.ராஜசேகர் ஆகியோரை, நிரந்தர நீதிபதிகளாக நியமிக்கும்படி, உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதிகள் அடங்கிய கொலீஜியம், மத்திய அரசுக்கு பரிந்துரை செய்திருந்தது.
இதை ஏற்று, நான்கு பேரையும் நிரந்தர நீதிபதிகளாக நியமித்து, ஜனாதிபதி திரவுபதி முர்மு உத்தரவிட்டுள்ளார். சென்னை உயர் நீதிமன்றத்தில் அனுமதிக்கப்பட்ட 75 நீதிபதிகளில், தற்போது, 65 நீதிபதிகள் உள்ளனர்.