தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ போட்டி தேர்வுக்கு இலவச பயிற்சி

போட்டி தேர்வுக்கு இலவச பயிற்சி

போட்டி தேர்வுக்கு இலவச பயிற்சி


ADDED : ஜூன் 08, 2024 01:28 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 08, 2024 01:28 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம், ரயில்வே, வங்கிப் பணி தேர்வுகளில், தமிழக இளைஞர்கள் அதிகம் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக, 1,000 மாணவர்களுக்கு, 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ், உண்டு உறைவிட வசதியோடு, ஆறு மாத இலவச பயிற்சி தமிழக அரசால் வழங்கப்படுகிறது.

பயிற்சிக்கான 1,000 மாணவர்களை தேர்வு செய்வதற்காக, ஜூலை 14 நுழைவு தேர்வு நடக்கிறது. இதில், பயன்பெற விரும்பும் மாணவர்கள், வங்கி தேர்வுகளுக்கான பயிற்சி, மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் மற்றும் ரயில்வே தேர்வுகளுக்கான பயிற்சி ஆகிய ஏதேனும் ஒன்றில் பயிற்சி பெறலாம்.

நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், https:www.naanmudhalvan.tn.gov.in என்ற இணையதளத்தில், இன்று முதல் விண்ணப்பிக்கலாம். வரும் 23ம் தேதி கடைசி நாள்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us