ADDED : மே 25, 2024 02:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:'குரூப் - 1 தேர்வுக்கு, இலவச பயிற்சி பெற விரும்புவோர், மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்' என, வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை கமிஷனர் சுந்தரவல்லி தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தற்போது, டி.என்.பி.எஸ்.சி., சார்பில், 90 காலியிடங்களை நிரப்புவதற்கான, குரூப் - 1 தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் முதல்நிலை தேர்வுக்கு, இலவச பயிற்சி வகுப்புகள், மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகங்களில், சிறந்த பயிற்சியாளர்களை வைத்து நடத்தப்பட உள்ளது.
இப்பயிற்சி வகுப்புகளில், அதிகமான மாணவ -மாணவியர் பங்கேற்று, தேர்வுகளில் வெற்றி பெற்று, அரசு வேலை பெற மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகங்களை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

