ADDED : மார் 07, 2025 12:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனையின் தலைமை மருத்துவ அதிகாரி அஸ்வின் அகர்வால் கூறியதாவது:
உலக கிளக்கோமா வாரம், ஆண்டுதோறும் மார்ச் 9 முதல் 15ம் தேதி வரை அனுசரிக்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான கருப்பொருளாக, 'எதிர்காலத்தை தெளிவாக காணுங்கள்' என்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
எனவே, டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனையில், கண்ணுக்குள் அழுத்தப் பரிசோதனைகள், கண் நரம்பு மதிப்பாய்வுகள், பார்வைப்புலச் சோதனைகள் உள்ளிட்ட பரிசோதனைகள் இலவசமாக மேற்கொள்ளப்படும்.
கண் அழுத்த நோய்கள் இருப்பதாக கண்டறியப்படும் நோயாளிகளுக்கு, மருந்துகள், லேசர் சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சைகளுக்கு ஆலோசனைகள் வழங்கப்படும். இது தொடர்பாக, மருத்துவ ஆலோசனை பெற விரும்புவோர் 95949 03774 என்ற எண்ணில் முன்பதிவு செய்யலாம்.