பாம்பன் துாக்கு பாலத்தில் ராட்சத வீல்கள் பொருத்தம்
பாம்பன் துாக்கு பாலத்தில் ராட்சத வீல்கள் பொருத்தம்
ADDED : ஜூன் 25, 2024 10:54 PM

ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் அருகே பாம்பன் புதிய ரயில் துாக்கு பாலத்தின் இரும்பு துாண்கள் மீது ராட்சத வீல்களை ரயில்வே பொறியாளர்கள் பொருத்தினர்.
இப்பாலம் நடுவில் கப்பல் சென்றுவர 'லிப்ட்' முறையில் இயங்கும் வகையில் துாக்குப் பாலத்தை ரயில்வே பொறியாளர்கள் வடிவமைத்துள்ளனர்.
இந்த துாக்கு பாலம் 700 டன்னில் பாம்பன் கிழக்கு கடற்கரையில் வடிவமைக்கப்பட்டு மார்ச் 12 முதல் நகர்த்திச் செல்லப்பட்டு துாக்கு பாலம் பொருத்தும் இடம் அருகில் கொண்டு சென்றுள்ளனர்.
துாக்கு பாலத்தின் இரு பகுதியில் உள்ள 4 இரும்பு துாண்களில் இரு துாண்களின் மேலே இரும்பு பிளேட் அமைத்து நேற்று இரு ராட்சத வீல்களை பொறியாளர்கள் பொருத்தினர்.
இந்த வீல்கள் மற்றும் இதனுள் பொருத்த இரும்பு ரோப்களை மழை, வெயிலில் இருந்து பாதுகாக்க இதன் மேலே இரும்பு கூண்டு வடிவில் பெட்டி பொருத்தும் பணி ஓரிரு நாட்களில் நடக்கும் என ஊழியர்கள் தெரிவித்தனர்.

