கு.க., சிகிச்சைக்கு பின் கர்ப்பம் இழப்பீடு வழங்க கோர்ட் உத்தரவு
கு.க., சிகிச்சைக்கு பின் கர்ப்பம் இழப்பீடு வழங்க கோர்ட் உத்தரவு
ADDED : ஜூலை 11, 2024 09:09 PM
மதுரை:ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் ஒரு பெண்ணிற்கு 2023ல் குடும்பக் கட்டுப்பாடு ஆப்பரேஷன் நடந்தது. அப்பெண் மீண்டும் கர்ப்பமுற்றார். அவர் தற்போது 7 மாத கர்ப்பிணியாக உள்ளார். அவர், 'சம்பந்தப்பட்ட டாக்டர் ஆப்பரேஷன் நடந்தபோது கவனக்குறைவாக இருந்ததால் கர்ப்பமுற்றேன். எனக்கு 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க தமிழக சுகாதாரத்துறை செயலருக்கு உத்தரவிட வேண்டும்,' என மனு செய்தார்.
நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் விசாரித்தார்.அரசு தரப்பு: சிகிச்சைக்கு முன் நிபந்தனைகளுக்கு உட்பட்டு விண்ணப்பத்தில் மனுதாரர் கையொப்பமிட்டுள்ளார். மனுதாரருக்கு 30,000 ரூபாய் மட்டுமே இழப்பீடு பெற உரிமை உண்டு. இவ்வாறு தெரிவித்தது.நீதிபதி: கவனக்குறைவாக ஆப்பரேஷன் செய்யப்பட்டது என்பதற்கான ஆவணம் எதையும் மனுதாரர் தாக்கல் செய்யவில்லை. அலட்சியம் இருந்தது என முடிவுக்கு வர முடியாது.
25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட இயலாது. மனுதாரருக்கு இழப்பீடாக 30,000 ரூபாய் மட்டும் வழங்க சுகாதாரத்துறை செயலருக்கு உத்தரவிட முடியும். மனு பகுதியாக அனுமதிக்கப்படுகிறது. இது தொடர்பாக சிவில் வழக்கு தாக்கல் செய்ய மனுதாரருக்கு உரிமை அளிக்கப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டார்.

