கல்லுாரிக்கு நேரில் சென்று பாருங்கள் கல்வி ஆலோசகர் அஸ்வின் 'அட்வைஸ்'
கல்லுாரிக்கு நேரில் சென்று பாருங்கள் கல்வி ஆலோசகர் அஸ்வின் 'அட்வைஸ்'
ADDED : ஜூன் 23, 2024 03:11 AM

கல்வி ஆலோசகர் அஸ்வின் பேசியதாவது:
இன்ஜினியரிங் படிப்பில் சேர்வதில் அதிகமான போட்டி, கணினி அறிவியல் துறைக்கு தான் உள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு வந்துள்ளவர்களில், 70 சதவீதம் பேர் கணினி அறிவியல் துறையை தான் தேர்ந்தெடுப்பீர்கள். வேலைவாய்ப்பு தரும் ஐ.டி., துறையினர், பட்டப்படிப்பை மட்டும் பார்ப்பதில்லை. கூடுதல் திறன் இருக்கிறதா என்பதையும் பார்க்கின்றனர்.
பிளஸ் 2 வரை கஷ்டப்பட்டு படித்து விட்டு, கல்லுாரியில் ஜாலியாக இருக்கலாம் என்பர். ஆனால், படிப்பு என்றாலே, அதில் ஜாலி என்பதை விட, கஷ்டப்பட வேண்டும். ஒவ்வொரு மாணவனுக்கும் பகுத்தறியும் சிந்தனைத் திறன் இருக்க வேண்டும்.
எந்த துறை வேண்டுமென்றாலும் படியுங்கள். ஆனால், சிக்கலான பிரச்னைகளுக்கு தீர்வு காணும் திறன் இருக்க வேண்டும். கணிதம் கற்க வேண்டியது அவசியம் ஆகும்.
கணினியில், ஜாவா போன்ற புரோகிராமிங் மொழிகள் தெரிந்திருக்க வேண்டும்.
டேட்டா ஸ்ட்ரக்சர்ஸ், அல்காரிதம் தெரிந்திருந்தால், பெரிய நிறுவனங்களில் கோடிக்கணக்கான ரூபாய் சம்பளத்தில் வேலைவாய்ப்பு பெறலாம். கேட் தேர்வில் வெற்றி பெற்றால், முதுநிலை படிப்பில் சேர்வது மட்டுமின்றி, பொதுத் துறை நிறுவன வேலைவாய்ப்பும் கிடைக்கும். கேட் தேர்வுக்கும், ஐ.இ.எஸ்., தேர்வுக்கும் பாடத்திட்டம் ஒன்றாக இருக்கும். தேர்வு முறைகள் வேறுபடும்.
கல்லுாரிகளுக்கு நேரில் சென்று பார்த்து, அதன் உள்கட்டமைப்பு வசதிகளை தெரிந்து கொண்டு, கல்லுாரிகளை தேர்வு செய்வது நல்லது.
இவ்வாறு அவர் கூறினார்.

