உள்ளடக்கத்திற்கு செல்ல
ADDED : மார் 31, 2024 03:04 AM
அ நிறம் | அளவு
சென்னை: தமிழகத்தில் நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம் கிராம், 6,390 ரூபாய்க்கும்; சவரன், 51,120 ரூபாய்க்கும் விற்பனையானது. கிராம் வெள்ளி, 80.80 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
நேற்று தங்கம் விலை கிராமுக்கு 20 ரூபாய் குறைந்து, 6,370 ரூபாய்க்கும்; சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து, 50,960 ரூபாய்க்கும் விற்கப்பட்டது. வெள்ளி கிராமுக்கு 20 காசு உயர்ந்து, 81 ரூபாய்க்கு விற்பனையானது.
சர்வதேச நிலவரங்களால், உள்நாட்டில் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தநிலையில், நேற்று சற்று குறைந்தது.
