விடுமுறைக்கு பின் மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை! சவரன் ரூ,120 அதிகரிப்பு!
விடுமுறைக்கு பின் மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை! சவரன் ரூ,120 அதிகரிப்பு!
ADDED : டிச 30, 2024 10:27 AM

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்துள்ளது.
சர்வதேச அளவில் நிலவில் பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் காரணமாக ஆபரணத் தங்கத்தின் விலையில் மாற்றம் நிகழ்கிறது. அந்த வகையில் விடுமுறைக்கு பின்னர் இன்று தங்கம் விலையில் மாற்றம் காணப்படுகிறது.
அதன்படி, ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.120 உயர்ந்துள்ளது. ஒரு சவரன் தங்கம் ரூ.57,200க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.7,150 ஆக இருக்கிறது.
கடந்த 10 நாட்களில் (டிச.20 முதல் டிச.29) தங்கம் விலை நிலவரத்தைக் காணலாம்;
டிச.20 - ரூ. 56,320
டிச.21 - ரூ. 56,800
டிச.22 - ரூ. 56,800
டிச. 23 - ரூ. 56,080
டிச. 24 - ரூ.56,720
டிச.25 - ரூ. 56,800
டிச.26 - ரூ. 57, 000
டிச.27 - ரூ.57,200
டிச.28 - ரூ.57,080
டிச.29 - ரூ.57,080 (விடுமுறை என்பதால் விலையில் மாற்றம் இல்லை)