தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ தி.மு.க., நிர்வாகி மீதான குண்டர் சட்டம் ரத்து

 தி.மு.க., நிர்வாகி மீதான குண்டர் சட்டம் ரத்து

 தி.மு.க., நிர்வாகி மீதான குண்டர் சட்டம் ரத்து

1


ADDED : செப் 29, 2026 06:39 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 29, 2026 06:39 AM

1


1
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: தி.மு.க., நிர்வாகி அரசகுமாரை, குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்று தருவதாகக் கூறி, கோடிக்கணக்கில் பண மோசடி செய்ததாக, தி.மு.க., செய்தி தொடர்பு குழு துணைத் தலைவரும், தனியார் பள்ளிகள் சங்கத் தலைவருமான அரசகுமார் மீது, போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

தொடர்ந்து, அரசகுமார், சங்க பொருளாளர் முத்துகுமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அரசகுமாரை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க, சென்னை மாநகர போலீஸ் கமிஷனர், கடந்த ஜூலை 11ல் உத்தரவிட்டார்.

இதை ரத்து செய்யக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசகுமாரின் மனைவி கோகிலா மனு தாக்கல் செய்தார்.

மனுவை விசாரித்த நீதிபதிகள் சதீஷ்குமார், ராஜசேகர் அடங்கிய அமர்வு, குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் அரசகுமாரை சிறையில் அடைத்து, போலீஸ் கமிஷனர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us