ADDED : ஜூன் 29, 2024 09:12 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பட்டாசு விபத்துகளை தடுப்பதில், அரசு நிர்வாகம் ஆக்கப்பூர்வமாக செயல்படவில்லை. பட்டாசு விபத்துகளை தடுப்பதில் அரசு நிர்வாகம் தோல்வி அடைந்து விட்டதை இது காட்டுகிறது. கள்ளச்சாராயம் குடித்து பலியானவர்களுக்கு தமிழக அரசு, 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்குகிறது.
ஆனால், வாழ்வாதாரத்திற்கு வேலை செய்து உயிரிழப்போருக்கு ஓரிரு லட்சம் இழப்பீடு பெறவே மண்டியிடும் நிலை உள்ளது. பட்டாசு தொழிலாளர்களுக்கு, 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். மதுவிலக்கு உட்பட ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, மாநில அளவிலான போராட்டம் நடத்த உள்ளோம்.
மாஞ்சோலையில் தொழிலாளர்கள் வெளியேற்றப்படக் கூடாது. அவர்களுக்கு அங்கேயே வாழ்வாதாரம் தரவேண்டும் என்பது புதிய தமிழகத்தின் நிலைப்பாடு.
- கிருஷ்ணசாமி
புதிய தமிழகம் கட்சி தலைவர்

